அரசியல் கட்சி அறிவிப்புக்குப் பின் ரஜினி பிறந்தநாள்: ரஜினி வேடத்தில் மாஸ் காட்டிய ரசிகர்கள்!
ரஜினிகாந்தின் 70ஆவது பிறந்தநாளை தொடர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அவரது ரசிகர்கள் பாட்சா, எந்திரன், முத்து ஆகிய படங்களின் கதாப்பாத்திரங்களாக வேடமிட்டுக்கொண்டு ரஜினிகாந்தின் இல்லத்திற்கு வந்து மாஸ் கட்டியுள்ளனர். முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளுக்கு வீட்டில் இருக்க மாட்டேன், வீட்டிற்கு வர வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தார். இருப்பினும் இன்று ரசிகர்கள் அதிக அளவில் போயஸ் தோட்டத்தில் கூடினர்.