மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி வழிந்த ராஜாதோப்பு அணை! - Rajathoppu Dam
வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள ராஜாதோப்பு அணை கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையினால் அதன் முழு கொள்ளளவை எட்டியது. அதன் தொடர்ச்சியாக, நேற்று (டிசம்பர் 14) மாலை முழுமையாக அணை நிரம்பி வழிந்தது. இந்நிலையில், இன்று(டிச. 15) வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் மற்றும் கே.வி. குப்பம் சட்டப்பேரவை உறுப்பினர் லோகநாதன், மலர் துவி தண்ணீரை வரவேற்றனர். அணை நிரம்பியதாலும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும் என்பதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.