திருக்கடையூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர் - thirukadaiyur temple
மயிலாடுதுறை: வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகக் கடந்த ஐந்து நாள்களாகத் தமிழ்நாட்டில் கனமழை பெய்துவருகிறது. இதனால் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான புகழ்பெற்ற அமிர்தகடேஸ்வரர் ஆலயம் முழுவதும் மழைநீர் புகுந்தது. இதனால் கோயில் நிர்வாகத்தினர் இரண்டு ராட்சத மின் மோட்டார்களைக் கொண்டு உட்புகுந்த மழைநீரை வெளியேற்றிவருகின்றனர்.