கன்னியாகுமரியில் மழை ஓய்ந்த பிறகும் வடியாத வெள்ளம்! - முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு
கன்னியாகுமரியில் இரண்டு நாள்கள் பெய்த கனமழை காரணமாக வீடுகளில், சாலைகளில் வெள்ள நீர் புகுந்து மக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் முழு கொள்ளளவை எட்டி வினாடிக்கு 47 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் மழை குறைந்துள்ளதால் 8000 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மழை, அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரால் தாழ்வான பகுதிகளான பருத்தி கடவு, வைக்கல்லூர், பார்வதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 600க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. மின்சாரம், உணவு இன்றி தவித்து வருவதாக மக்கள் வேதனை தெரிவித்தனர்.