22 இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் - உதகை மக்களுக்கு எச்சரிக்கை - ஊட்டி மழை
நீலகிரியில் கனமழை பாதிப்புகளை எதிர்கொள்ள 42 குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர். 456 தற்காலிக முகாம்கள் தயாராக வைக்கபட்டுள்ளன. கன மழையால் 283 இடங்கள் அபாயகரமான இடங்களாகவும். அதில் 22 இடங்களில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டு வருவதாக கண்டறியபட்டுள்ளது. அந்த 22 இடங்களிலும் தாசில்தார் தலைமையிலான குழுக்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் வரும் 5 நாட்களுக்கு கன மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.