கோவை மழை: பெருமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகள் சேதம்! - கோவை மழை
கோயம்புத்தூர் ரயில் நிலையம், காந்திபுரம், லட்சுமி மில், புளியகுளம், வடவள்ளி, இடையர்பாளையம், டவுன்ஹால், பெரிய கடை வீதி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்ததால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. உப்பிலிபாளையம் மேம்பாலம் மற்றும் கிக்கானி மேம்பாலம், அரசு மருத்துவமனை அருகே உள்ள மேம்பாலம் அடியிலும் நீர் அதிகளவு தேங்கியதால் போக்குவரத்து முடங்கியது.