தமிழ் கலாசாரம் மதிக்கப்பட வேண்டும் - ராகுல் காந்தி - jallikattu news
அவனியாபுரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் இணைந்து ஒரே மேடையில் சீறிப் பாயும் காளைகளையும், திமிலைப் பிடித்து அடக்கி ஆளும் காளையரையும் கண்டுகளித்தனர். விழா மேடையில் பேசிய ராகுல் காந்தி, “தமிழ் மக்களுக்கு வணக்கம், தமிழக மக்களுடன் நின்று அவர்களின் வரலாற்றை பாரம்பரியத்தை காக்க வேண்டியது எனது கடமை. உங்களது உணர்ச்சிகளையும், கலாசாரத்தையும் பார்க்க வந்துள்ளேன்” என்றார்.