திருவெண்காடு புதன் தலத்தில் வெகு விமரிசையாக நடைபெற்ற தேரோட்டத் திருவிழா! - நாகை மாவட்ட செய்திகள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உள்ள திருவெண்காடு புதன் தலத்தில் இந்திர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு விநாயகர், முருகர், பிரம்ம வித்யாம்பிகை உடனான ஸ்வேதாரண்யேஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகள் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து சுவாமிகளுக்குச் சிறப்பு தீபாராதனை நடைபெற்று மூன்று தேர்களையும் திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து நான்கு வீதிகளையும் வலம்வந்தனர். இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.