தொழிலாளர் சட்டத்திருத்த நகல் எரிப்பு போராட்டம்: 25 பேர் கைது - நகல் எரிப்பு போராட்டம்
தேனி: தொழிலாளர் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அதன் நகல் எரிப்பு போராட்டம் இன்று நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் தடையை மீறி சட்ட திருத்த நகலை எரிக்க முயன்ற தொழிலாளர்களைத் தடுத்த காவல்துறையினர், அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க 25க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர்.