அர்ஜூன் சம்பத்துக்கு எதிராகப் போராட்டம்! - திராவிடர் தமிழர் கட்சி போராட்டம்
கோவை: தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் காவி ஆடை அணிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும், அர்ஜூன் சம்பத்தினை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி, திராவிடர் தமிழர் கட்சியினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.