Exclusive: கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை - ககன்தீப்சிங் சிறப்புப் பேட்டி - பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையர் பேட்டி
Exclusive: பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையர் ககன்தீப்சிங் பேடி இன்று நமது ஈடிவி பாரத்துக்கு சிறப்புப் பேட்டி அளித்தார். அப்போது, சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு விரைந்து தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சென்னையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தத் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, பண்டிகை காலங்களில் பொதுமக்கள் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றிட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.