பூம்புகார் தொகுதி அதிமுக வேட்பாளர் பவுன்ராஜ் தீவிர வாக்கு சேகரிப்பு! - மயிலாடுதுறை அண்மைச் செய்திகள்
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.பவுன்ராஜ், அரசூர் விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர் கொத்தங்குடி, விளாகம், நல்லாடை, திருவிளையாட்டம், ஈச்சங்குடி ஆகிய கிராமங்களுக்கு திறந்த வாகனத்தில் சென்று பரப்புரை மேற்கொண்டார். அவரை அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்தும், மலர்தூவியும் உற்சாகமாக வரவேற்றனர். தேர்தல் அறிக்கையில் அதிமுக அளித்துள்ள வாக்குறுதிகளை எடுத்துக்கூறி, இரட்டை இலை சின்னத்திற்காக பவுன்ராஜ் வாக்கு சேகரித்தார். இந்தப் பிரச்சாரத்தின்போது பாமக, பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.