ஏலேலோ ஐலேசா! கடல் ராசாக்களின் பொங்கல் கொண்டாட்டம்! - பொங்கல் கொண்டாட்டம் 2021
நாகர்கோவிலை அடுத்த கேசவன்புத்தன்துறை கிராமத்தில் வசிக்கும் கிறிஸ்தவ மீனவர்கள் கடந்த 54 ஆண்டுகளாக பொங்கல் திருநாளை கொண்டாடி வருகின்றனர். இந்தாண்டு பொங்கலை முன்னிட்டு ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பிரார்த்தை நிறைவடைந்த பிறகு படகு போட்டி, நீச்சல் போட்டி ஆகியவற்றை நடத்தி மீனவர்கள் உற்சாகமாக பொங்கல் விழாவைக் கொண்டாடினர்.