சுற்றுலா பயணிகள் வாகனத்தை வழிமறித்த ஒற்றை காட்டு யானை - சுற்றுலா பயணிகள் வாகனத்தை வழிமறித்த ஒற்றை காட்டு யானை
கோவை: நவமலை மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு காட்டு யானைகள் செல்லாமல் இருக்க, வனத்துறையினர் வாகன ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பகலில் வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை, நவமலை சாலையில் சுற்றுலா பயணிகள் வந்த வேனை வழிமறித்தது. இதனையடுத்து, வனத்துறையினர், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் யானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்டினர். மேலும், யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.