'சாராயமா கடத்துறீங்க!' கண்காணிக்க கிளம்பியது ட்ரோன் - Liquor trafficking in Cuddalore
ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில், புதுச்சேரியில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு சாராயம் மற்றும் மது பாட்டில்கள் கடத்தப்படுவதாக கடலூர் மதுவிலக்கு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் வந்தது.இதனை தொடர்ந்து காவல் துறையினர் ட்ரோன் கேமிரா மூலம் கடலூர் மாவட்ட எல்லைப் பகுதிகளான பெரியகங்கணங்குப்பம், ரெட்டிச்சாவடி, மஞ்சகுப்பம், நெல்லிக்குப்பம், உண்ணாமலைசெட்டி சாவடி, மேல்பட்டாம்பாக்கம் ஆகிய பகுதிகளில் கண்காணித்தனர். மேலும் மதுபாட்டில்கள் கடத்துபவர் வேறு ஏதேனும் புதுவழி அல்லது புதிய உத்திகளை கையாள்கிறார்களா எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.