தலைக்கவசம் அணிவதன் அவசியம்: காவல் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி - Vaniyambadi police helmat awarness
திருப்பத்தூர்: வாணியம்பாடி காவல் துறை சார்பில் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தியும், சாலைப் பாதுகாப்பு விதிகள் குறித்தும் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை காவல்துறை கண்காணிப்பாளர் பழனி செல்வம் தொடங்கி வைத்தார். பேரணியானது பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதி வழியாக மீண்டும் பேருந்து நிலையத்திலேயே முடிவடைந்தது. இதில் பறை இசைத்தும், நடனமாடியும் இசைக் கலைஞர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.