தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

புற்றுநோயால் உயிரிழந்த காவலர்: 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை! - நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

By

Published : Jun 24, 2021, 4:35 PM IST

நாகப்பட்டினம்: வேதாரண்யம் அடுத்த வாய்மேடு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்தவர் தமிழ்வாணன் (50). இவர் கடந்த ஒரு வருட காலமாக புற்றுநோயால் அவதிபட்டு வந்த நிலையில், கடந்த ஜூன் 20ஆம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையிலிருந்த அவர் சிகிச்சை பலனின்றி ஜூன் 22ஆம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் சென்னையிலிருந்து சொந்த ஊரான ஆயக்காரன்புலத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், மாவட்ட ஆயுதப்படை காவலர் 21 குண்டுகள் முழங்க இறுதிச் சடங்கு நடைபெற்றது.

ABOUT THE AUTHOR

...view details