தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ஏரியில் ஆசனம் - எச்சரித்த காவல் துறையினர் - திண்டுக்கல் செய்திகள்

By

Published : Sep 28, 2021, 8:35 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை பகுதியை சேர்ந்த தங்கபாண்டி, கொடைக்கானல் ஏரியின் நடுவில் மிதந்தபடி இருந்துள்ளார். இதனை கண்ட பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் யாரோ இறந்து மிதப்பதாக நினைத்து காவல் துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர், அவர் உயிரிடன் இருப்பதை அறிந்து, அவரை கரை பக்கம் அழைத்து வந்தனர். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் தான் ஒரு சிவனடியார் என்றும், தண்ணீரில் மிதந்தபடி ஆசனம் செய்ததாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து அவரை எச்சரிக்கை செய்து அனுப்பினர். இவர் நீரில் மிதக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details