அன்புமணி பிறந்தநாள் விழா: கேக் வெட்டி பாமகவினர் கொண்டாட்டம் - அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணியின் 53ஆவது பிறந்தநாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இலையூர் கிராமத்தில் பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் உலக சாமிதுரை உள்ளிட்ட பாமகவினர் "வருங்கால தமிழக முதல்வர்" என்று எழுதப்பட்ட 53 கிலோ எடையுள்ள பிரமாண்டமான கேக்கை வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினார்கள். இந்த விழாவில் திரளான பாமக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
TAGGED:
அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்