மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்! - மருத்துவ காப்பீடு திட்டம்
நாமக்கல்: பொது சுகாதாரத்துறை சார்பில் பிரதம மந்திரியின் ஜன் ஆரோக்கிய யோஜனா மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் மெகராஜ் தொடங்கி வைத்தார். அப்போது, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 1451 சிகிச்சைகளுக்கு காப்பீடு பெற முடியும், குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு பெற முடியும் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட செவிலியர் கல்லூரி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.