வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பெரியாரிய உணர்வாளர்கள் பரப்புரை! - தமிழ் விடுதலைப் புலிகள்
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் மேற்கொண்ட பரப்புரை பயணம் மயிலாடுதுறையில் நிறைவடைந்தது. முன்னதாக, மயிலாடுதுறை வந்த பரப்புரை பயணக் குழுவினருக்கு பேருந்து நிலையம் முன்பு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பு மகேஷ் தலைமையில், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்டோர் வரவேற்பளித்தனர். தொடர்ந்து பெரியாரிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொழிலன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன் ஆகியோர் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி பேசினர்.