அக்னி வெயில் - வேப்ப இலையைக் குடையாக மாற்றிய மதுப்பிரியர்கள்! - liqour
ஊரடங்கு உத்தரவு காரணமாக, கடந்த 43 நாள்களாக தமிழ்நாட்டில் மது விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மதுபான கடைகள் இன்று திறக்கப்பட்டன. மதுப்பாட்டில்களை வாங்குவதற்காக, பலரும் அதிகாலை முதல் மதுபானக்கடைகளில் காத்திருந்தனர். தேனி மாவட்டம், கட்டுப்பாட்டு பகுதியில் அமைந்துள்ள மதுபான கடைகளில், மது வாங்க பலரும் நீண்ட நேரமாகக் காத்திருந்தனர். அப்போது அக்னி வெயில் வாட்டியதால், சிலர் வேப்ப இலைகளை தலையில் கட்டிக் கொண்டு மதுபானம் வாங்க வரிசையில் காத்திருந்தனர்.