கனமழையால் மக்கள் அவதி - பள்ளிகளுக்கு விடுமுறை - பள்ளிகளுக்குள் சென்ற மழை நீர்
திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாகச் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் கல்லணை மேல்நிலைப்பள்ளி, ஜவகர் பள்ளி ஆகியவற்றிற்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாநகராட்சி, பொதுப்பணித் துறை அலுவலர்கள் கால்வாய்களிலுள்ள அடைப்புகளைச் சரிசெய்து தற்காலிகமாக நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.