'பாபா... பாபா...' - வேனின் பின்னே ஓடிய மக்களால் பரபரப்பு - சென்னை அண்மைச் செய்திகள்
பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா, நேற்று காவல் நீட்டிப்புக்காக செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரைக் காண குவிந்த பக்தர்கள், "பாபா... பாபா..." என அழுதபடியே, அவரை அழைத்துச் சென்ற வேனின் பின்னே ஓடினர்.