தடையை மீறி புத்தாண்டு கொண்டாடிய மக்கள்! - தடையை மீறி புத்தாண்டு கொண்டாடிய மக்கள்
கரோனா முன்னெச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தமிழ்நாடு அரசு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் கட்டுப்பாடுகளை மீறி பொதுமக்கள் கடற்கரையில் இறங்கி புத்தாண்டை கொண்டாடினர். மேலும், விழா நாள்களில் புதுப் பொலிவுடன் காணப்படும் பூம்புகார், தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது.