Palar River Drone shot : பாலாற்றில் வெள்ளம் - கிராமங்களில் சூழ்ந்த வெள்ள நீர் - பாலாறு கழுகு பார்வை
ஆந்திராவில் பெய்யும் கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள விரிஞ்சிபுரம் பாலாற்றில் வரலாறு காணாத வகையில் 100 ஆண்டுகளுக்குப் பின் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாலாற்றின் இரு கரையும் தொட்டவாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டு இருக்கிறது. ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் அருகில் உள்ள கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் போக்குவரத்து முழுமையாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.