'மதுராந்தகத்தில் 90 விழுக்காடு கடைகள் திறப்பு' - ஹாயாக சுற்றித் திரியும் மக்கள்! - செங்கல்பட்டில் 90 விழுக்காடு கடைகள் திறப்பு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில், 90 விழுக்காடு கடைகள் திறக்கப்பட்டதால், மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. மதுராந்தகம் மக்கள் சமூக இடைவெளியைக் காற்றில் பறக்கவிட்டு, முகக்கவசம் ஏதுமின்றி கரோனா பாதிப்புத் தெரியாமல், சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். இந்நிலையில், முகக்கவசம் இல்லாமல் பஜார் வீதிக்கு வரும் நபர்களுக்கு தொண்டு நிறுவனம் சார்பில் முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் திரிவது மேலும் கரோனா பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.