மஞ்சக்காடாக காட்சியளிக்கும் ஊட்டி! - ooty latest news
ஊட்டி அருகே கூடலூரை அடுத்துள்ள மலைப்பகுதிகளில் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் பூக்கும் மஞ்சள் நிற காட்டு சூரியகாந்தி மலர் தற்போது பூத்துக் குலுங்குகிறது. இதனால் அந்தப் பகுதியே மஞ்சக்காடாக காட்சியளிக்கிறது. இதனைக் காண சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.