தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

மார்கழி திருவிழா! - தோடர் இன மக்கள் உற்சாக நடனம்! - பழங்குடியினர் ஆடிய பாரம்பரிய நடனம்

By

Published : Dec 31, 2020, 12:55 PM IST

உதகை அருகே 150 ஆண்டுகள் பழமையான பவானீஸ்வரர் கோவிலின் மார்கழி மாதத் திருவிழா, 108 ஆம் ஆண்டாக நேற்று தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் ஊர்வலத்தில் தேரை தோடர் இன மக்கள் இழுத்துச் சென்றனர். அதனைத் தொடர்ந்து தோடர் இன பழங்குடியின ஆண்கள் வட்டமாக கூடி நின்று, புத்தாண்டில் நல்ல மழை பெய்ய வேண்டும், மக்கள் அனைவரும் உடல் நலத்துடன் இருக்க வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என வேண்டி, தங்களது பாரம்பரிய நடனத்தை, தங்கள் மொழியில் பாடி நடனமாடினர். இது அங்கிருந்தவர்கள் அனைவரையும் கவர்ந்தது.

ABOUT THE AUTHOR

...view details