தோடர் இன மக்கள் நடனமாடி உற்சாகமாக கொண்டாடிய 'மொற்ட்வர்த்' திருவிழா - தோடர் இன ஆண்கள் பாரம்பரிய நடனம்
நீலகிரி: உதகை அருகே தோடர் இன பழங்குடி மக்கள் புத்தாண்டை கொண்டாடும் விதமாக 'மொற்ட்வர்த்' என்ற விநோத திருவிழாவில் 70 மந்துகளைச் சார்ந்த 500க்கும் மேற்பட்ட தோடர் இன ஆண்கள் கலந்துகொண்டு பாரம்பரிய நடனமாடினர். பின்னர் அனைவரும் “முன்போ” என அழைக்கப்படும் கூம்பு வடிவிலான குல தெய்வ கோயில் மற்றும் “அடையாள்வேல்” என்றழைக்கபடும் பிரை வடிவிலான கோயிலுக்கு சென்று நாடு செழிப்பாக இருக்க வேண்டும் என மண்டியிட்டு பிரார்த்தனை செய்தனர். இறுதியாக தோடர் இன இளைஞர்கள் தங்களுடைய வீரத்தை வெளிப்படுத்தும் வகையில் இளவட்ட கல்லையும் தூக்கி பலத்தை காண்பித்தனர்.