கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் இணைய வழி மலர் கண்காட்சி - Online flower show at Kodaikanal
கொடைக்கானலில் கரோனா காரணமாக ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் மலர் கண்காட்சி, கோடைவிழா ஆகியவை தடைபட்டுள்ளன. இச்சூழலில் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் இந்த ஆண்டு பூத்து குலுங்கும் பல லட்சம் மலர்களை, கண்டு களிக்க தோட்டக்கலை துறை சார்பில் புது முயற்சியாக எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ட்ரோன் கேமரா மூலம் காணொலி எடுக்கப்பட்டு, யூடியூப் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.