குமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகைக் கொண்டாட்டம்..!! - #கேரள ஓணம்
கன்னியாகுமரி :கேரள மாநிலத்தில் மிகப் பிரபலமாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை இன்று குமரி மாவட்டத்திலும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து, அத்தப்பூ கோலமிட்டு, ஊஞ்சல் ஆடி ஓணம் பண்டிகையை கொண்டாடினர். இதை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. பல்வேறு கோவில்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.