கஜா புயல் தாக்கி ஓராண்டாகியும் ஆறாத ரணங்கள்! OneYearofGaja - கஜா புயல் கோரத்தாண்டவம்
கடந்த ஆண்டு கஜா புயல் தாக்கியதில் டெல்டா பகுதி மக்கள் வீடு வாசலையும், மாடு கன்றுகளையும், பயிர் பச்சையையும் இழந்து மிகவும் நொடித்துப் போனார்கள். பல ஆண்டுகளாக பாடுபட்டு வளர்த்த சுமார் ஒரு கோடி தென்னை மரங்கள் சின்னாப்பின்னமாயின. இம்மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அப்போது அறிவித்த அரசு, ஓராண்டுக்குப் பின்பும் மெத்தனம் காட்டி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர் இப்பகுதி மக்கள்.