Omicron: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிறப்பு வார்டு - ஒமைக்ரான் சிறப்பு வார்டு
மதுரை: தென் ஆப்பிரிக்காவில் உருவான ஒமைக்ரான், தற்போது உலக நாடுகளில் வெகு வேகமாக பரவி வரும் நிலையில், அதனை இந்தியாவில் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் ஒன்றிய- மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒமைக்ரானுக்கு என தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சிகிச்சையளிக்கும் வகையில் செயற்கை சுவாசக் கருவிகளுடன் 30 படுக்கைகள் கொண்ட வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.