குடிநீர் இல்லை...! ஆனால் வரி மட்டும் செலுத்தனுமா? - ரவீந்திரநாத்
தமிழ்நாட்டில் கடந்த பல மாதங்களாக தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் தவித்து வந்தனர். குறிப்பாக சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறை பெரிய அளவில் பாதிப்புக்குள்ளானது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் பொதுமக்களுக்கான சேவையை செய்யத் தவறிய தமிழ்நாடு அரசு, இந்தாண்டுக்கான குடிநீர் வரியை பாதிக்கப்பட்ட மக்களிடம் வசூலிக்கக் கூடாது என சமூக ஆர்வலர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.