சாலையை மறைத்து நின்ற காட்டு யானை - பொதுமக்கள் அச்சம் - யானையால் சாலை மறியல்
நீலகிரி மலைப்பாதையில் ஒற்றை காட்டுயானை மரப்பாலம் அருகே வழிதெரியாமல் சாலையை வழிமறித்து நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனா். இதனால் மலைப்பாதையில் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. காட்டு யானையை படம் பிடிக்க பொதுமக்கள் கூட்டம் கூடியதால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் வனத்துறையினா் சாலையில் முகாமிட்டிருந்த காட்டுயானையை போராடி வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனா். குன்னுாா் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் நெடுஞ்சாலைத் துறையினா் சாலைப்பணிக்காக யானைகள் வரும் சாலையை அடைத்துள்ளதால் காட்டுயானை குழப்பமடைந்து எந்தப் பக்கம் செல்வது என தெரியாமல் தவித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.