புதிய நெல் கிட்டங்கி கட்டடம் திறப்பு விழா - தூத்துக்குடி மாவட்ட செய்திகள்
தூத்துக்குடி மாவட்டம் நபார்டு வங்கி நிதியுதவியுடன் பெருங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம் ரூ. 19 லட்சம் மதிப்பில் புதிய நெல் கிட்டங்கி கட்டடம் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமை தாங்கினார். ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதன் கலந்துகொண்டு கட்டடத்தை திறந்து வைத்தார்.