முழுக் கொள்ளளவை எட்டிய நெல்லை அடவி நயினார் கோயில் அணை! - நெல்லை மாவட்ட செய்திகள்
நெல்லை: செங்கோட்டையை அடுத்த மேக்கரையிலுள்ள அடவி நயினார் கோயில் நீர்த்தேக்கம் அதன் முழுக் கொள்ளளவான 132 அடியை எட்டி மறுகால் விழுந்தது. இதன் காரணமாக, விநாடிக்கு 30 கன அடி தண்ணீர் அணையிலிருந்து திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நீர் மூலம் சுமார் 7500 ஏக்கர் நேரடி பாசன சாகுபடி விவசாயம் செழித்து ஓங்கும் என அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.