கல்லூரி நூற்றாண்டு விழாவில் மாணவர்கள் மனித சங்கிலி! - human chain
திருச்சியில் உள்ள தேசியக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக மாணவ மாணவிகள், பேராசிரியர்கள் உள்ளிட்ட சுமார் 4000 பேர் கலந்து கொண்டு மனித சங்கிலியை அமைத்தனர். திருச்சி தலைமை தபால் நிலையத்தில் தொடங்கிய இந்த மனித சங்கிலி ஒரு கிலோ மீட்டர் தூரம்... அதாவது திருச்சி ரயில்வே ஜங்ஷனில் சென்று முடிவடைந்தது.