சுலபத்தில் அகலாத கஜா தாக்கம்: புயல் விட்டுச்சென்ற வடு!
கஜா என்னும் கோர புயல் மக்களைத் தாக்கி ஓராண்டாகியும் அது விட்டுச் சென்ற வடுக்கள் இன்னும் அப்படியேத்தான் இருக்கின்றன. இந்தப் புயலால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் சீரமைப்புப் பணிகள் இன்னும் முறையாக செய்யப்படாமல் இருப்பதால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்தை சந்தித்துவருகின்றனர்.