தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்திய நாகை ஆட்சியர்! - நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ்
இந்தியாவின் 73ஆவது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து நாகை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி, தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் காவல் துறை, ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விழாவில் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் கௌரவிக்கப்பட்டனர்.