நாகையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்! - நாகை சாலை மறியல் போராட்டம்
நாகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் 21 மாத கால எட்டாவது ஊதியக்குழு நிலுவை தொகை வழங்கிட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.