மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் கோரி வேதனையுடன் ஒப்பாரி பாடிய விவசாயிகள் - nagai farmers singing oppari
நாகை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால் அத்திபுலியூர், நீலப்பாடி, ராதாநல்லூர், ஒதியத்தூர், கூத்தூர், குருமணாங்குடி, செருநல்லூர், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த 600 ஏக்கர் சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதனால் பாதிப்புக்கு ஆளாகி உள்ள அத்திப்புலியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் இன்று வயல் நடுவில் இறங்கி கதிர் முளைத்த நெற்கதிர்களை கண்டு ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சேதமடைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.