’நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் சுங்கசாவடிகள் உடைக்கப்படும்’ - சீமான் - நாம் தமிழர் கட்சி
விருதுநகர்: தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், அரசுக்கு இருக்கும் கடனுக்கு மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துவிட்டு, இனி வாங்கும் கடனுக்கு பொறுப்பேற்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும், “நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் சுங்கச்சாவடிகள் அனைத்தும் உடைத்து எறியப்படும். சீமான் ஓட்டுக்காக வரவில்லை, நாட்டுக்காக வந்து உள்ளேன். டிவி, வாஷிங் மிஷின், கிரைண்டர் இலவசமாக வழங்காமல் அவற்றை மக்கள் தங்கள் உழைப்பில் வாங்குவதற்கு ஏற்ப வாழ்க்கைத்தரம் உயர்த்தப்படும். மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது பலர் நெஞ்சு வலியால் இறக்கப் போகிறார்கள். டிஜிட்டல் இந்தியாவில், வாக்கு எண்ணிக்கை நடந்த ஒரு மாத காலம். இந்த இடைப்பட்ட நாள்களில் வாக்குப் பெட்டியை வைத்து என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை” என்றார்.