எளிமையாக குதிரை வண்டியில் பரப்புரை மேற்கொள்ளும் நாம் தமிழர் வேட்பாளர்! - mayilai naam tamilar
மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காசிராமன் பழமையை நினைவுகூரும் வகையில் குதிரை வண்டியில் கரும்பு விவசாயி சின்னத்திற்கு வாக்கு கேட்டு பரப்புரை மேற்கொண்டார். மண்வளம் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுமையான முறையில் பரப்புரை மேற்கொண்டுவரும் வேட்பாளர் காசிராமன், இன்று தொகுதிக்குள்பட்ட சித்தர்காடு, மூவலூர், மல்லியம், ஆனைமேலகரம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் தொண்டர்களின் இருசக்கர வாகனங்களில் பின்தொடர, இவர் குதிரை வண்டியில் சென்று வாக்குச் சேகரித்தது பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது.