தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

முகவூர் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா: காற்றில் பறந்த கரோனா விதிமுறைகள்! - விருதுநகர் கோவில் திருவிழா

By

Published : Apr 14, 2021, 4:54 PM IST

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் மாரியம்மன் கோயிலில் கடந்த 21 நாள்களுக்கு முன்பு கரகம் எடுக்கப்பட்டது. தொடர்ந்து 21ஆவது நாளான இன்று எட்டு டன்கள் விறகு கொண்டு அக்னிக் குண்டம் அமைக்கப்பட்டு, 108 பக்தர்கள் பூக்குழி இறங்கினர். முன்னதாக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் 10ஆம் தேதி முதல் திருவிழாக்கள் கொண்டாடுவதற்கு அரசு தடைவிதித்து உத்தரவிட்டது. ஆனால், பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் இவ்விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், 10 விழுக்காடு பக்தர்கள் மட்டுமே முகக் கவசம் அணிந்திருந்தனர். தனி மனித இடைவெளியையும் பின்பற்றவில்லை. இந்நிலையில், மாவட்ட நிர்வாகமும் காவல் துறை அலுவலர்களும் எவ்வாறு திருவிழாவுக்கு அனுமதி கொடுத்தனர் என்பது குறித்து சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details