கரோனாவால் இறந்தோர் மோட்சமடைய தீப வழிபாடு - கரோனா பாதிப்புகள்
மயிலாடுதுறை வேத சிவாகம பாடசாலையில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் மோட்சமடைய மகாளயபட்சத்தில் 201 அகல்விளக்குத் தீபங்கள் ஏற்றப்பட்டன. தமிழ்நாடு விஸ்வ இந்து பரிஷத் மாநிலத் தலைவர் கோபால்ஜி முதல் விளக்கை ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள், பொதுமக்கள் அனைத்துத் தீபங்களையும் ஏற்றி கரோனா தொற்றில் உயிரிழந்தவரின் ஆன்மா மோட்சம் அடைய வழிபாடு நடத்தினர்.