குமரியில் சாலை பள்ளங்களை நிரம்பி வழிய செய்த பருவமழை! - பருவமழையில் குளிரும் கன்னியாகுமரி
கன்னியாகுமரி: கேரளாவின் அருகாமை மாவட்டமான குமரியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இன்று அதிகாலை இடியுடன் பெய்யத் தொடங்கிய இம்மழை விவசாயிகள் மனதை குளிரச் செய்தது. ஒருபக்கம், குமரியின் மலையோர பகுதிகளில் வலுக்கும் மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மறுபக்கம் நாகர்கோவில், கோட்டாறு, வடசேரி, மணிமேடை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் பெருக்கெடுத்த மழைநீரால் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்திற்கு இடையூறானது.
Last Updated : Jun 5, 2020, 10:16 PM IST