தக்கலையில் குடியிருப்புக்குள் புகுந்த உடும்பு! - கன்னியாகுமரி மாவட்ட செய்திகள்
கன்னியாகுமரி: தக்கலை அருகே குமாரபுரம் காலனி பகுதியில் பெரிய உடும்பு ஒன்று குடியிருப்புப் பகுதியில் நுழைந்தது. உடனே அதனை இளைஞர்கள் சிலர் பிடித்து அப்பகுதிக்கு வந்த கொற்றிக்கொடு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். காவலர்கள் பிடிபட்ட உடும்பை வனத் துறையினர் மூலம் பத்திரமாக வனப்பகுதிக்கு கொண்டுசென்று விட்டனர்.