"ஆட்சியில் இருப்பவர்களை நிலைகுலைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுகிறது"- தமிமுன் அன்சாரி - nagai district news
நாகை: மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன்அன்சாரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, டில்லியில் விவசாயிகள் நடத்தும் அறவழிபோராட்டங்கள் நாடு முழுவதும் மிகப்பெரிய ஆதரவு பெற்று போராட்ட கலமாக டில்லி உள்ளது. மத்திய அரசு இந்த போராட்டத்தை நேர்மையான வழியில் கையாளாமல் குறுக்கு வழியில் ஒடுக்க முயற்சிக்கிறது. சமீப காலமாக குறுக்கு வழியில் ஆட்சியை கைப்பற்றுவது, ஆட்சியில் இருப்பவர்களை நிலைகுலைக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என்றார்.